மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கதை எழுதி தயாரித்துள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. இந்த படத்தை 'படைவீரன்' பட புகழ் இயக்குநர் தனா, மணிரத்னத்துடன் இணைந்து கதை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிரீத்தா ஜெயராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வருகிற ஜனவரி 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் விநியோக பங்குதாரராக YNOTX நிறுவனம் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
We are ready to bring you a glimpse of #VaanamKottattum😊 Are you ready to watch it? #VaanamKottattumteaser out on 8th!#ManiRatnam @Dhana236 @iamVikramPrabhu @aishu_dil @MadonnaSebast14 @realsarathkumar @realradikaa @imKBRshanthnu @nandaaactor @amitashpradhan pic.twitter.com/IAzw644VNP
— Madras Talkies (@MadrasTalkies_) January 6, 2020