நடிகர் சூர்யாவின் சூரரை போற்று ரிலீஸ் குறித்து இயக்குநர் ஹரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30 அன்று அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குநர் ஹரி இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய சூர்யா அவர்களுக்கு,
உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள். ஒரு ரசிகனாக உங்கள் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஓ.டி.டி-யில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்கள்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம், தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்., ஆனால், தியேட்டர் என்ற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஓர் அங்கிகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும், என அவர் தெரிவித்துள்ளார்.