capmaari 90 others

"ஒரே ஒரு ஊருக்குள்ள.. ஒரே ஒரு..!" - சேரப்பாவின் பாசக் காவியத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தவமாய் தவமிருந்து’.

Director Cheran's army celebrates the 14 years of Thavamai Thavamirunthu

சேரன், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், பத்மபிரியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படம் மக்களின் பேராதரவை பெற்று தந்ததுடன், இயக்குநர் சேரனுக்கு திரையுலகில் ஓர் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தது.

இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை நினைவுக்கூரும் விதமாக சேரன் தனதி ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்று தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியிட்டு 14 ஆண்டுகள். தமிழ் சமூகத்தின் இடைநிலை வாழ்வில் இருக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்வும் அதில் குடும்பத்தலைவனின் அர்ப்பணிப்பும் சொல்லப்பட்டது அதை உச்சி முகர்ந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி’ என தெரிவித்திருந்தார்.

எதார்த்த வாழ்வியலை உணர்வுப்பூர்வமாக படமாக்குவதில் இயக்குநர் சேரன் கைத்தேர்ந்தவர் என்பது ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, பொற்காலம், வெற்றிக்கொடி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, இயக்குநர் சேரனுக்கு அதிகரித்த அவரது ஆர்மியினர், ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்தின் 14 ஆண்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Director Cheran's army celebrates the 14 years of Thavamai Thavamirunthu

People looking for online information on Cheran, Rajkiran, Saranya Ponvannan, Thavamai thavamirunthu will find this news story useful.