பிரபல இயக்குநர் பாலா 'நாச்சியார்' படத்துக்கு பிறகு அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை 'வர்மா' என்ற பெயரில் இயக்கினார். பல்வேறு காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த படம் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஜோசஃப்' படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை பாலா, தனது பி ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். அதில் ஒரு வேடத்திற்காக உடல் எடை அதிகரித்தார். சுமார் 22 கிலோ வரை அதிகரித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 105 கிலோவில் இருந்து மீண்டும் 79 கிலோவிற்கு மாறியுள்ளதாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
— RK SURESH (@studio9_suresh) August 13, 2020