தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் நாளை ( அக்டோபர் 25 ) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய்யுடன் அட்லி இணைந்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படம் இயக்குநர் அட்லி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர்கள் உங்களுக்கு பிடித்த காட்சி எது, தளபதியை பார்த்து ரசித்து எடுத்த சீன் எது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்டர்வெல் சீன் நோக்கி போய்ட்டு இருக்கும் போது ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு சீன். நாளைக்கு பார்த்துட்டு சொல்லுங்க'' என்றார்.
Railway station scene towards interval! Naaliki paathutu neenga badhil solunga nanba! #AskAtlee https://t.co/Zkikj6eeZB
— atlee (@Atlee_dir) October 24, 2019