கொச்சி: தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.
2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.
அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்போன்ஸ் நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டர் முழுக்க, பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ், பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் ரசிகரின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். அதில், "தயவு செய்து KGF, RRR அல்லது விக்ரம் படங்கள் போல GOLD படத்தை எதிர்பார்க்காதீர்கள்... GOLDல் ஒரு துப்பாக்கி அல்லது துப்பாக்கி ஷாட் கூட கிடையாது. அதேபோல நேரம் அல்லது பிரேமம் போன்ற ஒரு படத்தை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்.
கோல்ட், நேரம் -ஐப் போலவே இருக்கலாம், ஆனால் கோல்ட் அதன் தனி வழியில் தனித்துவமானது. GOLDக்காக 40 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். நாங்கள் அனைவரும் உங்களை மகிழ்விக்க முயற்சிப்போம். அதற்கு எங்கள் குழு உத்தரவாதம் அளிக்கும்". என கூறியுள்ளார்.