www.garudavega.com

VIDEO: பிரசித்தி பெற்ற தமிழக சிவன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்றுள்ளார்.

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பின்னர் அதே நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இசையமைப்பாளர் ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறை வழிபாடு செய்தனர்.

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

இச்சூழலில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஐஸ்வர்யா ராய் சாமி தரிசனம் செய்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு, பூஜை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

VIDEO: பிரசித்தி பெற்ற தமிழக சிவன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.. வைரல் போட்டோஸ் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director Aishwarya Rajinikanth visit Thiruvannamalai Temple

People looking for online information on Aishwarya Rajinikanth, Thiruvannamalai will find this news story useful.