நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
Also Read | “இந்த ஆஸ்கர் ரொம்ப பெரிய விஷயம்” - The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநர் தமிழ்நாட்டில் பேட்டி!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வீட்டில் 60 பவுன் தங்க ஆபரணங்கள், வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய் உள்ளது என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன் வீட்டில் பணியாற்றிய வேலை ஆட்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். தற்போது போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த அந்த புகாரில், கடந்த 19.09.2019-ம் ஆண்டு முதல் 10.02.2023 வரை இடைப்பட்ட காலத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு பணியாளர் ஈஸ்வரி என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அது அவரது வங்கிப் பரிவர்த்தனை மூலமாக தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read | போடு.! BIGG BOSS -ல வரப்போறாங்களா அமலா ஷாஜி.? ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகும் Post!