www.garudavega.com

"அவன் - இவன்" பட சர்ச்சை.. இயக்குநர் பாலா மீதான வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு  ‘அவன் இவன்’ திரைப்படம் வெளியானது.

direct bala avan ivan movie controversy case court verdict

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் அவதூறாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக, கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் வருத்தம் தெரிவித்ததால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குனர் பாலா ஆஜராகியும் வழக்கு விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஆனால் மனுதாரர், பாலா மீதான தம் தரப்பு புகாரை முறையாக நிரூபணம் செய்யாததால், ‘அவன் - இவன்’ பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அம்பை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவில், அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் குறித்தும் பாபநாசம் காரையாறு சொரிமுத்தையனார் கோயில் குறித்தும் அவதூறாக சித்தரித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் டைரக்டர் பாலா விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த வழக்கைத் தொடர்ந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் கடந்த ஆண்டு காலமானார். ஆனாலும் வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. ஏற்கனவே இந்தப் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்டதால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று டைரக்டர் பாலாவும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.

Also Read: “Producers-க்கு LOSS ஆயிடும்... நிறைய Call Sheet இருக்கு” - ஜாமின் கேட்டு கதறும் மீரா மிதுன்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Direct bala avan ivan movie controversy case court verdict

People looking for online information on Arya, Avan Ivan, Bala, Highcourt, Verdict, Vishal will find this news story useful.