capmaari 180 others

IT'S OFFICIAL - சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ‘தலைவர் 168’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

D.Imman onboard for Superstar Rajinikanth and Siruthai Sivas Thalaivar 168 film

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படமான ‘தலைவர் 168’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தினை ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்துடன் சன் பிக்சர்ஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமான் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

D.Imman onboard for Superstar Rajinikanth and Siruthai Sivas Thalaivar 168 film

People looking for online information on D. Imman, Rajinikanth, Sun pictures, Thalaivar 168, Veeram Siva will find this news story useful.