www.garudavega.com

அட, வாரிசு AUDIO LAUNCH ல பேசுனது மாதிரியே இருக்கே"... TRENDING பேச்சை ரிகிரியேட் செய்த தில் ராஜு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்படம் வாரிசு.

Dil raju re creates varisu audio launch speech video viral

Images are subject to © copyright to their respective owners

இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் வாரிசு படத்தில் நடித்திருந்தனர்.

விஜய் நடிப்பில் 'வாரிசு'

மேலும் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு படத்தை தயாரித்து இருந்தார். அதே போல இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய் திரைப்படத்திற்கு இசையமைக்கவும் செய்திருந்தார் எஸ் தமன். அவரது இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட பல விஷயங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவும் செய்திருந்தது.

Dil raju re creates varisu audio launch speech video viral

Images are subject to © copyright to their respective owners

தில் ராஜு பேச்சு

வாரிசு படத்தை போலவே அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் பேசி இருந்த விஷயங்களும் இணையத்தில் அதிக கவனம் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு படத்தில் இருக்கும் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், "டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, பாடி லாங்குவேஜ் வேணுமா, பாடி லாங்வேஜ் இருக்கு" என ஒரு வசனம் பேசி இருந்தார்.

Dil raju re creates varisu audio launch speech video viral

Images are subject to © copyright to their respective owners

இதனை பலரும் ஒரு பாடல் போல மீம் வீடியோவாக உருவாக்கி வைரல் ஆக்கவும் செய்திருந்தனர். அது மட்டுமில்லாமல், தனது பேச்சு ஒரு பாடல் போல மாறியதை தில் ராஜு கவனத்திற்கும் செல்ல அதற்கும் அவர் ரியாக்ட் செய்திருந்தார்.

இந்த சினிமால பைட்ஸ் இல்ல

இந்த நிலையில், தற்போது நடந்த தெலுங்கு படத்தின் நிகழ்ச்சியில் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை போல தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

Dil raju re creates varisu audio launch speech video viral

Images are subject to © copyright to their respective owners

சமீபத்தில் தெலுங்கில் வெளியான Balagam என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசி இருந்த தயாரிப்பாளர் தில் ராஜு, "இந்த சினிமால பைட்ஸ் இல்ல, இந்த சினிமால டான்ஸ் இல்ல, இந்த சினிமால விஜய் சார் பாடி லாங்குவேஜ் இல்ல, ஆனா இந்த படத்துல சூப்பர் எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு" என வாரிசு படத்தில் ட்ரெண்ட் ஆன பேச்சை போலவே தில் ராஜூ பேசி உள்ளது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dil raju re creates varisu audio launch speech video viral

People looking for online information on Dil Raju, Varisu will find this news story useful.