பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Image Credit : Dhivyadharshini / Instagram
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக அறியப்படுபவர் திவ்யதர்ஷினி. இவரை பலரும் சுருக்கமாக DD என அழைக்கின்றனர். சிறுவயதிலேயே சின்னத்திரையில் கால்பதித்த டிடி அதன்பின்னர் பல சேனல்களில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6-ல் சிறப்பு விருந்தினராகவும் பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் பிரவேசித்திருந்தார். இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இங்கிலாந்தில் அமைந்திருக்கும் உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் வலம் வருகிறார் டிடி.
Image Credit : Dhivyadharshini / Instagram
இந்த வீடியோவில் அவர் பேசுகையில்," சின்ன வயசுல இருந்தே இந்த இடத்துக்கு வரணும்னு ஒரு கனவு இருந்துச்சு. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். இங்க வரணும்னு ரொம்ப நாள் ஆசை. கடைசியா இங்க வந்துட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ளவற்றில் இதுவே மிகவும் பழமையான பல்கலைக்கழகம். 11 ஆம் நூற்றாண்டிலேயே இங்கே கற்பித்தல் நடைபெற்றதாக சொல்கிறார்கள். லண்டன்-ல இருந்து 2 மணிநேர பயண தூரத்துல இருக்கு இந்த யூனிவர்சிட்டி. இந்த வளாகம் ரொம்ப பெரிசு. இந்த மாதிரி ஒரு இடத்துல படிக்கும்போது பாடங்களை மட்டும் இல்லாம வாழ்க்கையையும் கத்துக்க முடியும். யாராவது கல்லூரி வாழ்க்கையில நுழைய போறீங்கன்னா இங்க வர முயற்சி பண்ணுங்க. நிறைய கல்வி உதவித் திட்டங்கள் இருக்கு. உங்க இலக்கை பெரியதா வைங்க" என்கிறார்.
Image Credit : Dhivyadharshini / Instagram
தொடர்ந்து தன்னுடைய பதிவில் அவர்,"ஒரு ஆங்கில பட்டதாரிக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு வருவது என்பது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை கொடுக்கும். இங்க வந்து படிக்க தான் முடியல. அட்லீஸ்ட் வந்து பார்க்க முடிஞ்சது. என்னுடைய ஆங்கில ஆசிரியர்கள் திருமதி டாசன் மற்றும் பிரபாகர் ஆகியோருக்கு நன்றி. இந்த வீடியோவை யாரேனும் கல்லூரிக்கு செல்ல இருப்பவர்களுக்கு அனுப்புங்கள். யாருக்கேனும் இது ஒரு உத்வேகமாக இருக்கட்டும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர்கள் கமெண்ட் பகுதியில் ஒரு ஹாய் சொல்லுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.