மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம். 1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’.
Also Read | Arabic Kuthu : "Vibe ஆகுறதுக்கு வயசு ஒரே தடையே இல்ல".. பாட்ட போட்டுக்கிட்டு குசும்பு பண்ண முதியவர்
முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது விமர்சன உலகம் படத்தை கொண்டாடி தீர்த்தது. இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றைய முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற தூதனுப்பினர்.
இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது.
தெலுங்கில் ‘மனசிச்சி சூடு’ எனும் பெயரில் இப்டம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார். இதனை தொடர்ந்து பல வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த நாகராஜ், பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதினார்.
பின்னர் நாகராஜ் இயக்கத்தில் 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார். Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.
பெயரிடப்படாத இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரபல இசையமைப்பாளர் C. சத்யா இசையமைக்கிறார். காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சாண்டி மாஸ்டர் இப்படத்துக்கு நடனம் அமைக்க, தினேஷ் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்கிறார்.
மக்கள் தொடர்பு - மணவை புவன்.
Also Read | "பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு" - காஜல் அகர்வால் வெளியிட்ட வைரல் PHOTOS!