Reliable Software
www.garudavega.com

'அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!'.. பிரபல தமிழ்ப்பட இளம் தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்!.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் இயக்குநர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் பலரும் கொரோனாவாலோ, உடல் நலகுறைவாலோ தொடர்ந்து மரணித்த சம்பவங்கள் திரைத்துறையையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தின.

dhdha87 movie young producer kalaiselvan dies due to covid19

அத்துடன் திரை வளர்க்கும் தயாரிப்பாளர்களின் உயிரையும் இந்த கொடிய காலம் குடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கஜினி, சுள்ளான் படங்களின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், முன்னதாக நரிகர் அருண் விஜயின் மாமனாரும் தமிழில் மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான N.S.மோகன் காலமானார்.

இந்நிலையில் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87 திரைப்படத்தின் இளம் தயாரிப்பாளர் மரணம் அடைந்துள்ளார். தாதா87 எனும் இப்படத்தை கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் என்பவர் தயாரித்திருந்தார். தற்போது கலைச்செல்வன் தான் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த கலைச்செல்வன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhdha87 movie young producer kalaiselvan dies due to covid19

People looking for online information on Dhadha, Dhdha87, Kalai Selvan will find this news story useful.