www.garudavega.com

'சன்னி லியோன்' படத்தில் தர்ஷா குப்தா.. என்ன படம்? வேற யார்லாம் நடிக்குறாங்க? செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, தற்போது திரைப்படங்களில் பிஸியாகி வருகிறார்.

dharsha gupta sunny leone starring new movie update

திரௌபதி மோகன் இயக்கும் ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் தர்ஷா குப்தா. ரிச்சர்டு ரிஷியுடன் இணைந்து தர்ஷா நடிக்கும் ஸ்டில்கள் அண்மையில் வெளியானது. இதனிடையே தர்ஷா குப்தா நடிக்கும் 2-வது திரைப்படத்தின் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

dharsha gupta sunny leone starring new movie update

அதன்படி, யுவன் இயக்கத்தில் ஜாவிட் இசையமைக்கும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் தர்ஷா குப்தா நடிக்கிறார். திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த தகவலை தர்ஷா குப்தா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

dharsha gupta sunny leone starring new movie update

தற்போது நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் பங்கேற்று தம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dharsha gupta sunny leone starring new movie update

People looking for online information on Dharsha Gupta, Sunny Leone will find this news story useful.