நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் ஐபிஎல் போட்டியை பார்த்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், நடிப்பில் வாத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
தமிழ் - தெலுங்கில் வெளியான 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் உலகம் முழுவதும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வாத்தி படத்தை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் புதிய வீடு கட்டி தமது பெற்றோருக்கு வழங்கிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நடிகர் தனுஷ், தமது இளைய மகன் லிங்கா மற்றும் மூத்த மகன் யாத்ரா ஆகியோருடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை & லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியை கண்டு களித்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன
#CaptainMiller Spotted at Chepauk Stadium Yesterday 💥🤩@dhanushkraja pic.twitter.com/AKJJmMpxZk
— Dhanush Trends (@Dhanush_Trends) April 4, 2023