www.garudavega.com

மனதை மயக்கும் 'வாத்தி' படத்தின் 1ST சிங்கிள் பாடல்.. புது ஸ்டில்களுடன் வெளியான LYRICAL VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Dhanush Vaathi Movie Vaa Vaathi First Single Released

Also Read | மீண்டும் உண்மைக் கதை.. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த படம்.. 11 மொழிகளில் ரிலீஸ்!

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. 

Dhanush Vaathi Movie Vaa Vaathi First Single Released

‘வாத்தி (Sir)’ படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி , இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

Dhanush Vaathi Movie Vaa Vaathi First Single Released

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்த படத்தின் முதல் சிங்கிள்  "வா வாத்தி" என்ற பாடல் ஸ்வேதா மோகன் குரலில் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார். மெலடி வகைமையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

Dhanush Vaathi Movie Vaa Vaathi First Single Released

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது. கேப்டன் மில்லர்  திரைப்படம் அடுத்து தயாராகி வருகிறது.

 

Also Read | அதர்வா - ராஜ்கிரண் நடிக்கும் 'பட்டத்து அரசன்' .. தஞ்சையை மையமாக கொண்ட கதையா.?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Vaathi Movie Vaa Vaathi First Single Released

People looking for online information on Dhanush, Vaa Vaathi First Single, Vaathi Movie will find this news story useful.