'இவர் மாதிரி டான்ஸ் ஆடணும்'' - 'தளபதி 64' நடிகர் குறித்து தனுஷ் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இந்த படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 2020, ஜனவரி 16 அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை R.S.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

Dhanush Tweets about Shanthnu's Chill Bro Dance Video

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இணை இசையமைக்கின்றனர். ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து Chill Bro பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் Chill Bro பாடலை நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரலாக்கினர். இதனை பகிர்ந்த நடிகர் தனுஷ், இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. சாந்தனு மாதிரி டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Tweets about Shanthnu's Chill Bro Dance Video

People looking for online information on Chill Bro, Dhanush, Shanthnu will find this news story useful.