www.garudavega.com

FIFA: இந்த வருசத்தோட மிகவும் மகிழ்ச்சியான நாள்.. தனுஷ் வைரல் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி குறித்த நடிகர் தனுஷின் ட்வீட் வைரலாகி வருகிறது.

Dhanush Tweet about FIFA World Cup Final Argentina Champion

Also Read | அதிர்ச்சி!!! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த போட்டியாளர்... Biggboss6

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.  நேற்றைய இறுதிப்போட்டி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Dhanush Tweet about FIFA World Cup Final Argentina Champion

இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த உலக கோப்பை இறுதி போட்டியில் அர்ஜென்டினா  ஆறாவது முறையாக  பங்கேற்றது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி 1930, 1990 மற்றும் 2014ல் நடந்த இறுதி போட்டிகளில் தோல்வியடைந்தது.

Dhanush Tweet about FIFA World Cup Final Argentina Champion

நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2வது கோல் அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இச்சூழலில் 81 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின்

எம்பாப்பே அடித்த முதல் கோல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கோலை எம்பாப்பே அடித்து அர்ஜென்டினா ரசிகர்களை உறைய வைத்தார்.

Dhanush Tweet about FIFA World Cup Final Argentina Champion

இதனால் 2-2 என போட்டி சமன் ஆனது. பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் இரு அணிகளுமே மீண்டும் ஒவ்வொரு கோல் அடிக்க 3-3 என மீண்டும் போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை அர்ஜென்டினா  வென்றது.

அர்ஜென்டினா  அணியின் வெறறி & மெஸ்ஸி குறித்து நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,"மெஸ்ஸி ! விசித்திரமான முடிவுகளும் சாத்தியம் !! மிகவும் தகுதியான வெற்றி.

டி மரியா தேவைப்படும் சமயத்தில் நன்றாக விளையாடினார், மேலும் இந்த போட்டியின் ஹீரோ எமி மார்டினெஸ்! இந்த உலகக்கோப்பை முழுவதிலும் கூட!!

இந்த வருடத்தின் மகிழ்ச்சியான நாள் இதுவாக இருக்கலாம்". என தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | திருமண நிகழ்வில் நடிகை ஹன்சிகா மோத்வானி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Tweet about FIFA World Cup Final Argentina Champion

People looking for online information on Argentina Champion, Dhanush, Dhanush Tweet, FIFA World Cup, FIFA World Cup Final, Messi will find this news story useful.