நடிப்பு, பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பன்முக திறமைகள் கொண்டவர் தனுஷ். தமிழில் நடிகராக அறிமுகமான தனுஷ், தனது திறனால் பாலிவுட், ஹாலிவுட் என அடுத்த கட்டங்களுக்கு வேகமாக சென்று விட்டார்.
Also Read | Vendhu Thanindhathu Kaadu: மைக் ஆன்ல இருப்பதை மறந்து சிம்புவிடம் புலம்பிய ராதிகா.. GVM அல்டிமேட் Thuglife.!
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, 'வாத்தி', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
இதில், வாத்தி திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' என்றும், தெலுங்கில் 'Sir' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக நவீன் நூலியும், இசையமைப்பாளராக G.V.பிரகாஷும் பணிபுரிகின்றனர்.
வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். டிசம்பர் மாதம் வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தனுஷ் அடுத்ததாக திரைப்படம் ஒன்றை இயக்க போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக தனுஷ் இயக்கத்தில் 'பவர் பாண்டி' திரைப்படம் வெளியாகி இருந்தது. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை தனுஷ் இயக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, தனுஷ் அடுத்து இயக்க போகும் திரைப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டாகி இருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | VTK : "சிம்புவ திட்டுங்கனு அவர் அம்மா கேட்டுக்கிட்டாங்க.. ஆனா.." - ராதிகா உருக்கம்.!