திருச்சிற்றம்பலம் படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
Also Read | நடிகர் சரவணன் நடித்த 'THE LEGEND'.. உலகளவில் செய்த மொத்த வசூல் இத்தனை கோடி ரூபாயா! ஆஹா
நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது.
'திருச்சிற்றம்பலம்' படத்தில் திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.
மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தின் அமெரிக்கா ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி வினியோகஸ்தரான பிரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம், அமெரிக்காவில் இது வரை 400,000. அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 3.19 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதுவரை வெளிவந்த தனுஷ் படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாக 'திருச்சிற்றம்பலம்' படம் உருவெடுத்துள்ளது.
#Thiruchitrambalam becomes @dhanushkraja highest grossing Tamil movie in USA
Thanks to @Ayngaran_offl & @sunpictures
🙏 @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @prakashraaj #BharathiRaja #PBS #Anirudh pic.twitter.com/y6Te9nG4Ku
— PrimeMedia (@PrimeMediaUS) August 29, 2022
Also Read | போடு வெடிய..LEGEND சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!