Naane Varuven M Logo Top
www.garudavega.com

பிரபல OTT-யில் ரிலீஸாகும் சூப்பர் ஹிட் 'திருச்சிற்றம்பலம்'.. எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படம் பிரபல OTT-யில் வெளியாக உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT

Also Read | 150 கிமீ வேகத்தில் G P முத்து உடன் பைக் ரைடு.. TTF வாசன் மீது பாய்ந்த போலீஸ் கேஸ்! முழு தகவல்

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றினார்.

Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT

இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது.

Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT

இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா (சீனியர் திருச்சிற்றம்பலம்) & அப்பாவாக (நீலகண்டன்) முறையே நடித்துள்ளனர்.

Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் 'ரஞ்சனி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன் 'ஷோபனா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் திருச்சிற்றம்பலம் படம் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | குழந்தையின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்ட சோனம் கபூர்.. பையன் பேரு இது தானாம்! வைரல் PHOTO!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT

People looking for online information on Dhanush, Sun Nxt, Thiruchitrambalam, Thiruchitrambalam Movie OTT Release will find this news story useful.