பிரபுதேவா ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் ஜல்சா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
Also Read | #BREAKING: பாலா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமா? ஜோதிகா character பற்றி Exciting தகவல்
பிரபுதேவா நடிக்கும் ஜல்சா…
பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜேஷ் நடிக்கும் 'ஜல்சா' படத்தை பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்குகிறார். இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் மற்றும் மலையாளத்தில் 15 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்சா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு தேவாவுடன் யோகிபாபு, தேவ தர்ஷினி சேத்தன் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகம் இசையமைக்கிறார். பாண்டிச்சேரி, சென்னை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை EVP பிலீம் சிட்டியில் நடைபெற்றது. ஒரு முக்கிய பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
பிரம்மாண்டமான பாடல்…
வழக்கமாக பிரபுதேவா நடிக்கும் படங்களில் பாடல்களும் அதற்கான நடனங்களும் சிறப்பான கவனிப்பை பெறும். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு பாடல் சிறப்பான கவனத்தைப் பெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன. அந்த தகவலின் படி இந்த பாடலில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் 300-க்கும் மேறப்ட்ட டான்ஸர்கள் ஆடியுள்ளனர். இந்த பாடலுக்காக ரஷ்யாவில் இருந்து 50 பெண் டான்ஸர்கள் அழைத்து வரப்பட்டு சென்னை பின்னி மில்லில் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரபுதேவாவுக்காக தனுஷ் கொடுத்த குரல்..
மேலும், இந்த பாஸ்ட் பீட் பாடலை தனுஷ் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாடலை பிரபுதேவா மேல் உள்ள மரியாதைக்காக பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தனுஷ் பாடிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. மாரி 2 படத்தில் மிகப்பெரிய க்ளோபல் ஹிட்டான ‘ரௌடி பேபி’ பாடலை தனுஷ் கேட்டுக்கொண்டதற்காக பிரபுதேவா நடனம் அமைத்துக் கொடுத்திருந்தார். அதற்காக இப்போது தனுஷ் இந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8