இளையாராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேக இசை கச்சேரி நேற்று இரவு நடந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை அடுத்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் யுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டு பாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் தீ-உடன் இணைந்து ரவுடி பேபி பாடலை தனுஷ் பாடி அசத்தியுள்ளார். இதேபோல், நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலை பாடியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் இருந்தே தனுஷ் - யுவன் பயணம் ஹிட் அடிக்கத் தொடங்கியது. இதேபோல், சிம்புவின் படங்களுக்கும் யுவனின் இசை முக்கியமானதாக இருந்தது.
இதில் கலந்து கொண்ட ‘தெருக்குரல்’ அறிவு மற்றும் பாடகி தீ ஆகியோருடன் தனுஷ் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் தனுஷ், ‘எஞ்சாமிகளுடன்.. எ பில்லியன் அண்ட் ஹாஃப் பிக்சர்’ என கேப்ஷன் போட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
With Enjaami’s .. A billion and a half picture !! pic.twitter.com/zYoIVH5Mvb
— Dhanush (@dhanushkraja) August 30, 2021
தெருக்குரல் அறிவு எழுதி, அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய என்ஜாயி எஞ்சாமி பாடல் உலக அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தனுஷின் கர்ணன் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தீ பாடிய பாடல்கள் முக்கியமானதாக அமைந்தன. இந்நிலையில் யுவனின் பர்த்டே கொண்டாட்டத்தில் தீ மற்றும் அறிவு ஆகியோருடன் இணைந்து தனுஷ் எடுத்துக்கொண்ட இந்த அட்டகாசமான புகைப்படத்தை எடுத்ததே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான்.
Clicked by @Music_Santhosh 🤪 https://t.co/HeUF7wYVqI
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 31, 2021
ஆம், ‘இந்த புகைப்படத்தை க்ளிக் பண்ணியது சந்தோஷ் நாராயணன்’ என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே ட்வீட் போட்டுள்ளார். இதை அடுத்து ரசிகர்கள் கமெண்டுகளில் யுவன் ஷங்கர் ராஜா உட்பட அனைவரையும் வாழ்த்தி வருகின்றனர்.