நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனருடன் இணையும் புதிய படத்தின் அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
Also Read | அட.. பிரபல தமிழ்நாட்டு கோயிலில் பொன்னியின் செல்வன் 'பூங்குழலி' சாமி தரிசனம்.!
நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் இப்படம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த திருச்சிற்றம்பலம் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படம், கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளனர். இந்த படம் முதல் நாளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை அடுத்து தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. SVCLLP ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அலுவலகத்தில் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ப்ரின்ஸ்' படத்தினை தயாரித்து வருகிறது.
Really excited to be working with one of the directors I admire @sekharkammula sir and also elated to join hands with NarayanDasNarang sir and PuskurRamMohanRao sir under @SVCLLP banner for this trilingual. Looking forward to this
— Dhanush (@dhanushkraja) June 19, 2021
Also Read | அதிர்ச்சி!!.. ஹோட்டல் அறையில் இளம் தமிழ் நடிகை, மாடல் எடுத்த சோக முடிவு!!