LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top
www.garudavega.com

ரஜினிகாந்தின் ஜெயிலர் போஸ்டரை பகிர்ந்து.. ஒரே வார்த்தையில் தனுஷ் போட்ட 'CAPTION'.. வைரல் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'ஜெயிலர்' படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி இருந்த நிலையில், இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

Dhanush shares rajinikanth jailer poster and reacts

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்த நிலையில், ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமான கதைக் களத்துடன் இயங்கி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நான்காவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் தற்போது நெல்சனுக்கு கிடைத்துள்ளது.

Dhanush shares rajinikanth jailer poster and reacts

அந்த வகையில், ஜெயிலர் படத்தில் லுக் போஸ்டர் ஒன்று, இன்று (22.08.2022) படக்குழுவினரால் அதிகாபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றியுள்ளார். மிகவும் கம்பீரான லுக்கில், ரஜினிகாந்த் நடந்து வருவது போன்று இருக்கும் இந்த போஸ்டர், தற்போது சினிமா ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Dhanush shares rajinikanth jailer poster and reacts

இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது கேப்ஷனில் "Wow!!" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush shares rajinikanth jailer poster and reacts

முன்னதாக, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், இயக்குனர் நெல்சன், சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி, அதிகம் வைரலாகி வருகிறது.

Dhanush shares rajinikanth jailer poster and reacts

ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கலாநிதி மாறன் தயாரிக்க உள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். அதே போல, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக் கண்ணன் பணிபுரிந்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush shares rajinikanth jailer poster and reacts

People looking for online information on Anirudh Ravichander, Dhanush, Jailer, Nelson Dilipkumar, Rajinikanth, Sun pictures will find this news story useful.