நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் மிக உயரிய அங்கீகாரமாக தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுவதாக இன்று மத்திய அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் ரஜினிகாந்த் தம்முடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய திரை சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது கிடைத்ததற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து கூறினர். இதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் கமலஹாசன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இதற்கு நன்றி ஒரு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தமது நடிப்புத் திறனறிந்து ஊக்குவித்த பேருந்து ஓட்டுநருக்கும், தன்னை நடிகனாக்க பல தியாகங்களை செய்த தமது அண்ணன் சத்யநாராயணா இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் தம்முடைய குருநாதர் K.பாலச்சந்தருக்கும் ரஜினி நன்றி தெரிவித்திருந்தார், மற்றும் பலருக்கும் நன்றி தெரிவித்து அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை ரீட்வீட் செய்துள்ளார் தனுஷ். அண்மையில்தான் அசுரன் திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகள் தமிழ் திரைத் துறைக்கு கிடைத்தன. ஒன்று அசுரன் திரைப்படம் சிறந்த மாநில மொழித் திரைப்படம் என்கிற தேசிய விருது. இன்னொன்று அசுரன் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் விருதினை தனுஷ் பெற்றிருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்திய அளவிலான மிக உயரிய விருதை பெறுகிறார். ஒட்டுமொத்தமாக தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இந்த அடுத்தடுத்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர்.
❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩 https://t.co/4koFhedtKw
— Dhanush (@dhanushkraja) April 1, 2021
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது.