இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தின் பெயர் கர்ணன். இப்படத்தின் புகைப்படம் ஒன்றை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்ததோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது இரண்டாவது படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பு மாரி செல்வராஜுக்கு கிடைத்தது. கர்ணன் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டது. கலைப்புலி தானு தயாரிப்பில் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மலையாள நடிகர் லால், ரஜீஷா விஜயன், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், கர்ணன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லுங்கி, பனியன் உடையில், உச்சிவெயிலில் மலை மீது ஏறி நின்று, கையில் நீண்ட வாள் ஒன்றை தனுஷ் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை அவர் பதிவிட்டிருப்பதோடு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். வடச்சென்னை, அசுரன் என தரமான படங்களை கொடுத்து வரும் தனுஷ், கர்ணன் படத்தின் இந்த ஸ்டில் மூலம், மீண்டும் அப்படியொரு படம் வரவிருக்கிறது என்பதை தனது பதிவின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
#கர்ணன் #karnan shoot in progress pic.twitter.com/YkjaaoIrgC
— Dhanush (@dhanushkraja) January 28, 2020