தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் புதிய BTS போட்டோவை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
AK61: ஹாட்ரிக் வெற்றிக்கு ரெடியான அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி! செம மாஸா ஆரம்பமான ஷூட்டிங்!
தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படபிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தது என தனுஷ் அறிவித்துள்ளார். மோனோக்ரோமில் புதிய BTS போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தனுஷ் ஜீப்பின் மீது அமர்ந்து இருக்கிறார்.
நானே வருவேன் படத்தின் நடிக்கும் அதேவேளையில் தனுஷ், தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வாத்தி, (தெலுங்கில் Sir) எனப் பெயரிடப்பட்ட படத்தில் தனுஷ் நடித்து வருகிறார், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
BOX OFFICE: பீஸ்ட் படத்தின் வசூல்.. டிக்கெட் முன்பதிவில் படைத்த சூப்பர் சாதனை!