நானே வருவேன் படத்தின் GENRE குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
Also Read | கலவரமான கோபி- ராதிகா திருமணம்.. உச்சக்கட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி.! திருமணம் நடந்ததா ?
தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பின்னணி இசை பணிகளுக்காக ஹங்கேரி புடாபெஸ்ட்டில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
'நானே வருவேன்' படம் நாளை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இந்நிலையில் இந்த படம் சைக்கோ த்ரில்லர் வகைமையில் உருவாகி உள்ளது என்று படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The much anticipated Psycho Thriller #NaaneVaruvean releasing tomorrow! 😎🍿👍🏼🏹#NaaneVaruveanFromTomorrow
Book your tickets now! @dhanushkraja @theVcreations @Selvaraghavan @thisisysr @omdop @dhilipaction @theedittable @RVijaimurugan @StunShiva8 @saregamasouth pic.twitter.com/c6VMI28ylM
— Behindwoods (@behindwoods) September 28, 2022
Also Read | பிரபல மருத்துவமனைக்கு சென்ற ராஷ்மிகா.. டாக்டர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்! என்னாச்சு?