நானே வருவேன் படத்தின் முதல் நாள் எதிர்பார்க்கப்படும் வசூல் குறித்த தகவல்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்துள்ளார்.
Also Read | FESTIVAL -ல் ரிலீஸ் ஆகும் லாரன்ஸ் & ப்ரியா பவானி சங்கரின் புதிய படம்.. மாஸ் போஸ்டருடன் Official அப்டேட்.!
தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பின்னணி இசை பணிகளுக்காக ஹங்கேரி புடாபெஸ்ட்டில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் கலைப்புலி தாணு, நானே வருவேன் படத்தின் முதல் நாள் வசூல் 12 முதல் 15 கோடி ரூபாய் வரை வசூலாகும் என கூறியுள்ளார். மேலும் இந்த படம், தனுஷ் திரை வாழ்வில் அதிக அளவில் வெளிநாட்டு உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் FDFS எப்போ? தயாரிப்பாளர் தாணு கொடுத்த தெறி அப்டேட்!