தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கர்ணன் படத்தின் 'கண்டா வர சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'உட்றாதீங்க யப்போ' போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் கர்ணன் திரைப்படம் ரிலீசானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாகவும் மாரி செல்வராஜுடன் புதிய படத்தில் இணைய போவதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிய கர்ணன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப் படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், ரசிகர்கள் இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளனர்.
Dhanush’s recent mega blockbuster #Karnan signed for a 30 day theatrical window with Amazon Prime and the premiere date is set for May 9th.
With almost all the films revising their deal with OTT platforms for early release, expect an official announcement soon from Amazon Prime. pic.twitter.com/AJkEm41FmU
— LetsOTT GLOBAL (@LetsOTT) April 27, 2021