தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரையரங்கில் நேரடியாக வெளியான கர்ணன் படத்துக்கு கலவையான கருத்துக்கள் எழுந்தன. இந்த படத்தில் கர்ணனாக வரும் தனுஷ், குதிரைக்கார சிறுவன், மஞ்சனத்தி கணவர் என அனைவருமே ஒரு கதாபாத்திரமாக வருவார்கள். நாயகியாக வரும் ரஜிஷா விஜயனும் கூட திரௌபதை எனும் கேரக்டரில் வருவார்.
இவர்களுள் முக்கியமான இன்னொரு கதாபாத்திரம் காட்டுப்பேச்சு. படம் முழுவதும் ஒரு முக்கிய சிறுதெய்வக் குறியீடாக வரும் காட்டுப்பேச்சியை பார்த்து 2 கே கிட்ஸ்கள் பலரும் பயந்து தான் போயுள்ளனர். இதனிடையே காட்டுப்பேச்சியாக நடித்ததே ஒரு 2 கே கிட்ஸ் தான். அந்த குட்டிப் பாப்பா பெயர் பூர்வதாரணி என்பதும் அந்த பெண் தான் தனுஷின் தங்கையாக வருகிறார் என்பதும் தெரியவர, இணையவாசிகள் இது தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த அழகு குழந்தையா பாத்தா இவ்வளவு நாளா பயந்துட்டு இருந்தேன்.
காட்டுப்பேச்சி....
கர்ணன்... pic.twitter.com/PQ7hVADK2F
— Krishnai Devi Shri (@Davisri_14) April 21, 2021
குறிப்பாக, “இந்த அழகு குழந்தைய பாத்தா இவ்வளவு நாளா பயந்துட்டு இருந்தேன்.” என்று ரசிகர்கள் பதிவிட்டு இந்த குழந்தையின் புகைப்படத்தையும் காட்டுப்பேச்சி போல அந்த குழந்தை மாஸ்க் அணிந்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
ALSO READ: உதயநிதிக்கு இவ்ளோ பெரிய மகனா?'.. நல்லா வளந்துட்டாரே? யாரும் பார்த்திராத வைரல் புகைப்படம்!