மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அப்பட தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ஜகமே தந்திரம் படம் சுருளி எனும் கேங்ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை சொல்லும் படம் ஆகும். இத்திரைப்படத்தை Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப்பெரிய எதிர்பார்க்கக்கூடிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்று அடையவுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜகமே தந்திரம் எனது கனவு திரைப்படம். என் மனதுக்கு நெருக்கமான படம். இக்கதை சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை. மேலும் உலகில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை. அனைத்து ரசிகர்களையும் இப்படம் சென்றடைய ஒரு புது வழியை கண்டடைந்துள்ளது. ஜகமே தந்திரம் 190 நாட்களில் பிரத்தியேகமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு தந்திரம் மிக்க உலகத்தை (Tricky World) இந்த படத்தின் மூலம் அளிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தில் தனுஷூடன் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
ALSO READ: விழிப்புணர்வும், விறுவிறுப்பும் கலந்த சக்ரா திரை விமர்சனம்