நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தெலுங்கு துறையிலும் தற்போது கால்பதித்து நடித்து வரும் முக்கியமான நடிகராக விளங்கி வருகிறார்.
தனுஷின் 20 ஆண்டுகள்
பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்ட தனுஷ் குறிப்பாக அண்மையில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார். இந்த நிலையில்தான் திரைத்துறைக்கு தனுஷ் வந்து இருபது ஆண்டுகாலம் நிறைவடைந்ததை ஒட்டி நடிகர் தனுஷ் ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி, "திரைத் துறையில் கால்பதித்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
நெகிழ்ச்சியான அறிக்கை
அதில், ''அனைவருக்கும் வணக்கம்... திரையுலகில் என் பயணம் தொடங்கி 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. காலம் வேகமாக ஓடுகிறது. நான் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கத் தொடங்கும்போது இவ்வளவு தூரம் வருவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை, கடவுள் கருணை காட்டியுள்ளார்.
என்னுடைய ரசிகர்களின் அளவுகடந்த அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் மட்டும் ஈடு செய்துவிட முடியாது. நீங்கள்தான் என் பலம், ஐ லவ் யூ ஆல்... என் மீது அன்பு செலுத்தும் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள். எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய அண்ணன் - குரு செல்வராகவன், எனக்குள் இருக்கும் நடிகனை வெளியில் கொண்டுவந்த என் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு நன்றிகள்.
இறுதியாக என் தாய்க்கு நன்றி... அவருடைய அன்றாட பிரார்த்தனைகள் தான் என்னை பாதுகாத்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என் அம்மா இல்லாமல் நான் ஒன்றுமில்லை. இந்த ஒரு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். எண்ணம் போல் வாழ்க்கை அன்பை பரப்புங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8