செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
Also Read | 4 ஆவது வாரத்தில் KGF 2… தமிழகத்தில் தற்போதைய நிலவரம் என்ன? தயாரிப்பாளர் SR பிரபுவின் viral Tweet!
ராக்கி, சாணிக்காயிதம்…
ரத்தம் தெறிக்க தெறிக்க உருவான ஆக்ஷன் படமான ‘ராக்கி’ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அந்த படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு ஆகியவை கவனிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டன. ஆனால் அதீத வன்முறைக் காட்சிகள் குறித்த விமர்சனங்களும் எழுந்தன. அந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த படமாக ‘சாணிக்காயிதம்’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படமும் ராக்கி போலவே வன்முறைக் காட்சிகளை அதிகமாகக் கொண்டுள்ள படமாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை கொடுத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளது.
கதைக்களம்…
ஒரே தந்தைக்கும் வேறு வேறு தாய்க்கும் பிறந்த அண்ணன் தங்கையாக செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இருவரும் பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் கணவர் மற்றும் குழந்தையை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பலை தேடி பழிவாங்குவதை ரத்தமும் சதையுமாக சொல்கிறது சாணிக்காயிதம். ராக்கி படம் போலவே படத்திலும் வன்முறை காட்சிகள் மிகவும் தீவிரத் தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ளன.
தனுஷ் பாராட்டு…
இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள நடிகர் தனுஷ், தனது அண்ணன் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் “ திறமையாக உருவாக்கப்பட்ட சாணிக்காயிதம் குழுவினருக்கு வாழ்த்துகள். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அருண் மாதேஸ்வரன். நீங்கள் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்” எனப் பாராட்டியுள்ளார்.
தனுஷுடன் கூட்டணி…
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இதை சமீபத்தில் தனுஷ் உறுதிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8