மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான "கர்ணன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வணிக ரீதியிலும் படைப்பு ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில் தற்போது மேலும் சிறப்பம்சமாக உலக அளவில் இதுவரை வெளியான அனைத்து படங்களில் இருந்து மிகச்சிறந்த 25 படங்களை பிரபல ஆங்கில இணையதளமான லெட்டர் பாக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 படங்கள் மட்டுமே இடம்பிடித்து உள்ளன. அதில் தமிழில் கர்ணனும், யோகிபாபு நடித்த மண்டேலாவும் அடக்கம். மலையாளத்தில் மூன்று படங்கள் இடம் பிடித்துள்ளன.
"தி கிரேட் இந்தியன் கிச்சன்" (மலையாளம்) - 5 வது இடத்தையும், "கர்ணன்" 10வது இடத்தையும், பகத் பாசில் நடித்த "ஜோஜி" (மலையாளம்) -12 வது இடத்தையும், "மண்டேலா" 17 வது இடத்தையும், நயாத்து (மலையாளம்) - 23 வது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் இடத்தை பிலிப்பைன்ஸ் திரைப்படமான கிளினர்ஸ் பெற்றுள்ளது. வரக்கூடிய காலங்களில் நல்ல படைப்புகள் தமிழிலிலும், பிற இந்திய மொழிகளிலும் உருவாகும் பொழுது இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என நம்பலாம்.