www.garudavega.com

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தமிழ் நடிகராக கடந்த வருடம் அசுரன் படத்துக்காக தேசிய விருது பெற்றார்.

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

நடிகர் தனுஷ் & இயக்குநர் ஐஸ்வர்யா

கடைசியாக அக்‌ஷய் குமாருடன் இணைந்து இந்தியில் அத்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) படத்தில் நடித்திருந்த தனுஷ் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் பகீர் படம் ஏற்கனவே தனுஷ் நடித்து வெளியான திரைப்படம்.

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

இதனைத் தொடர்ந்து தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தவிர தமிழில் மாறன், திருச்சிற்றபலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா, இயக்குநராக மூன்று திரைப்படத்தில் தனுஷை இயக்கியிருந்தார். இதனை அடுத்து வை ராஜா வை படத்தை இயக்கியிருந்தார்.

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

18 ஆண்டுகள் கணவன் மனைவியாக

இப்படி, இதுவரை 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியர் திடீரென மனமொத்து பிரிவதாக அறிவித்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிக்கையை இருவருமே பதிவிட்டுள்ளனர். மிக அண்மையில் தான் இவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று மாலையும் கழுத்துமாக நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

புரிந்து கொள்ள இந்த பிரிவு தேவை

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள இந்த பிரிவு தேவைப்படுவதாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த திடீர் பிர்வுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் ஒருபுறம் அதிர்ச்சியாக பேசி வருவதுடன், இவர்களின் வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு பாசிடிவ் வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.

Also Read: ஆர்.கே.சுரேஷ், கயல் ஆனந்தி கைகோர்க்கும் ‘ஒயிட் ரோஸ்’.. சைக்கோ திரில்லர் படம்.. ஒன்லைன் இதுதான்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife

People looking for online information on Aishwarya Dhanush, Aishwaryaa dhanush, Dhanush, Dhanush Aishwaryaa separation, Dhanush Aishwaryaa separation after 18 years husband and wife, Dhanush and Aishwaryaa will find this news story useful.