ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக, பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.
இதில்தான் ஏலியனாக வேடமிட்டுள்ள தனலட்சுமி பழங்குடியின மக்களிடம் மாட்டிக் கொள்ள, இவருக்கும் ஷிவினுக்குமான பேச்சு அப்போது வருகிறது. இதில் முதலில் ஷிவின் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பதில் பேசுவதாகவும், ஆனால் பழங்குடி மக்கள் பேசும் பாஷை புரியும் என்றும் சண்டையிடுகிறார். மேலும், அப்போது தனலட்சுமியை தொட்டு ஷிவின் பேசும்போது, “நீ ஏன் என்னை தொடுற? ச்சீ.. எனக்கு இரிட்டேட் ஆகுது. தொடாம பேசு” என தனலட்சுமி ஆவேசமாக கத்துகிறார். பின்னர் ஷிவின் தமிழில் பேச வேண்டும் என பிக்பாஸ் கூற, அதன் பின்னர் தனலட்சுமி மற்றும் மணிகண்டா ராஜேஷ் இருவரும் அவர் தவறாக விளையாண்டு நேரத்தை வீணடித்ததாக வாதம் செய்தனர். மேலும் பேசியவர் தான் கேட்பதற்கு ஷிவின் பதில் சொல்லவில்லை என்றும் அதே சமயம், ஷிவின் அழுதுவிட்டதாகவும் சொல்லி, அதனால் ஷிவின் தோற்றுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது தொடுவது ரூல் புக்கில் இல்லை என்று சொல்லும் மணிகண்டா ராஜேஷ், “ஷிவின் ஒரு டம்மி பீஸ்.. நீ விடு” என தனலட்சுமியிடம் கூறுகிறார்.
பின்னர் ஷிவினை குறிப்பிட்டு பல வேளைகளில் தனலட்சுமி காட்டமாக பேசும்போது, “நீயெல்லாம் என்ன கேரக்டர்.. நீ எதுக்காக விளையாட வந்த? இப்படிலாம் விளையாண்டால் உன் அம்மாவுக்கு பிடிக்குமா?” என்றெல்லாம் பேசியவர், ஒரு கட்டத்தில் ஷிவினின் அம்மா குறித்து பேசியதாக தெரிகிறது. இதனால் கோவப்பட்ட ஷிவின், “கேமுக்காக எனது அம்மாவை பற்றி எப்படி நீ அப்படி பேசலாம்? நான் அப்படி பேசினானா? உங்க அம்மாவை பார்த்தா கேவலாமா இருக்குன்னு சொல்ற? எந்த டாஸ்க் வந்தாலும் நான் உன்னை அப்படி கேவலமா பேசியிருக்கேனா?.. எனக்கு அம்மா என்றால் எவ்வளவு டச் பண்ணுகிற விஷயம் என்பது உனக்கே தெரியும்.. ஆனா தெரிஞ்சும் என்ன பார்த்து எப்படி நீ அப்படிலாம் கேட்கலாம்” என ஷிவின் எமோஷனலாக பேசினார்.
தொடர்ந்து பேசியவர், “உனக்கு வேணும்னா என் ஃபீலிங் புரியாம இருக்கலாம். ஆனா எனக்கு அப்படிலாம் இல்ல” மேலும் எமோஷனலாக அப்போது அவரை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். அதன் பின்னர் பாத்ரூம் பகுதியில் மைனாவிடம் ஷிவின் கதறி அழும் காட்சிகளும் வெளியாகின. ஆனால் இப்படி சண்டையிட்ட பிறகு தனலட்சுமி ஷிவினிடம் சென்று, “இது ஒரு கேம்.. டாஸ்கிற்காகவே நான் அப்படிபேசினேன். நீ உண்மையாகவோ பெர்சனாலகவோ எடுத்துக்கொண்டது எனக்கு தெரியாது, உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா Sorry!” என கூறுகிறார்.
அப்போது, ஷிவின் “நானும் உன்னை ஹர்ட் பண்ணி பேசியிருக்க கூடாது..” என்று பாத்ரூமில் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்தும் தனலட்சுமி, “சரி அழாத.. நம்மள 20 ஆயிரம் மக்கள் தேர்ந்தெடுத்துருக்காங்க.. நான் எதுவும் சீரியஸாக எடுத்துக்கல. டாஸ்க் வேற.. நம்ம ரிலேஷன் ஷிப் வேற.. போய் டாஸ்க் விளையாடு” என சொல்கிறார்.