தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருவதால் ஏராளமான பஞ்சாயத்தும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. தொடர்ந்து, இந்த டாஸ்க் முடிந்த பிறகு வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், வழக்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
இதற்கு மத்தியில், சமையல் அணியில் தொடர்ந்து ஒரே போட்டியாளர்கள் தான் இடம்பெற்று வருகின்றனர் என்ற தனலட்சுமியின் குற்றச்சாட்டை குறித்து கமல் கேள்வி எழுப்பி இருந்தார். தலைவர் தேர்வாவதற்கு முன்பாகவே குக்கிங் அணியில் இடம்பெறுவது யார் என்பது தீர்மானிக்கப்படுறது என தனலட்சுமி கூற, அப்போது மணிகண்டா, ஷிவின் உள்ளிட்ட போட்டியாளர்கள், அப்படி தலைவர் தேர்வாவதற்கு முன்பாகவே குக்கிங் அணியில் இடம்பெறுவது யார் என தீர்மானிக்கப்படவில்லை என்றும், அந்த அணியில் இடம்பெற கோரிக்கை மட்டுமே வைக்கப்படுகிறது என்றும் விளக்குகின்றனர்.
இதற்கான தீர்வு தான் என்ன என கமல்ஹாசன் தனலட்சுமியிடம் கேட்க, "அனைத்து அணியில் இருந்து மாறி மாறி குக்கிங் அணிக்கும் வரவேண்டும்" என தெரிவிக்கிறார். இதன் பின்னர் பேசும் கமல்ஹாசன், கிச்சன் அணியில் இடம் பெறும் யாரும் ஜெயிலுக்கு போவதில்லை என தனலட்சுமியின் குற்றச்சாட்டை நினைவு கூற, இது பற்றி பேசும் தனலட்சுமி, "ஆமா சார் வர்றதே இல்ல. ஏன்னா அங்க கண்ணே போறதில்ல சார்" என்கிறார்.
"அப்ப கிச்சன் டீம்ல போறதுல ஒரு Safety இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க இல்லையா? என கமல்ஹாசன் கேட்டதும் விளக்கம் கொடுக்கும் மணிகண்டா, ஜெயிலில் இருப்பதை விட 3 வேளை சமைப்பது கஷ்டம் என தெரிவிக்க, "நான் கஷ்டம் குறித்து பேசவில்லை, சமவாய்ப்பை பற்றி பேசுகிறேன்" என்றும் கமல்ஹாசன் தெரிவிக்கிறார். இப்படி அடுத்தடுத்து சில போட்டியாளர்கள் சமையல் அணி குறித்த விளக்கம் கொடுத்து கொண்டே இருக்க, கடைசியில் தனலட்சுமியிடம் வரும் கமல், நீங்கள் எப்படி அணியை தேர்வு செய்வீர்கள் என்றும் கேட்கிறார்.
சமையல் தெரியாத நபர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், அதிக ஆண்கள் அந்த அணியில் இருக்கும் போது தெரியாத விஷயத்தை மற்றவர்கள் தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் விளக்கம் கொடுக்கிறார் தனலட்சுமி.
இதனைத் தொடர்ந்து, "உங்களுடைய நோக்கம் வாய்ப்பா, இல்லை பழிவாங்கலா?" என கமல்ஹாசன் கேட்க அதற்கு தனலட்சுமி, அங்க வொர்க் பண்றவங்க இங்கையும் வொர்க் பண்ணனும்ன்னு தான் சார்" என கூறியதும், "நீங்கள் சம வாய்ப்பை தான் பேசுகிறீர்கள். என புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் எனக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்" என்றும் கமல் கடைசியில் தெரிவிக்கிறார்.
தன் உரிமைக்காக தானே குரல் கொடுத்த தனலட்சுமி என கடைசியில் அறிவிக்கும் கமல்ஹாசன், அவர் Save ஆனதாகவும் அறிவிக்கிறார்.