Sanjeevan M Logo Top
www.garudavega.com

BIGGBOSS வர்றதுக்காக தனலட்சுமி எடுத்த சோக முடிவு..? அவங்களே சொன்ன தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

dhanalakshmi about her love before biggboss 6 tamil

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

dhanalakshmi about her love before biggboss 6 tamil

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. சமீபத்தில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே வெடித்த பிரச்சனை தான், பிக்பாஸ் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. தொடர்ந்து, ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசி இருந்த ஜனனி, தனலட்சுமி செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், கண்ணீர் விட்டு பிக்பாஸ் வீட்டிற்கும் தெரியாமல் வந்து விட்டேன் என்றும் புலம்பி இருந்தார் தனலட்சுமி. இப்படி ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே நடந்த பிரச்சனை, பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில், தனலட்சுமி தனது காதல் குறித்து பேசியுள்ள விஷயம், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக பிக்பாஸ் சார்பில் முன்னாடி காதல் இருந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு தான் இல்லை என பதிலளித்ததாகவும் தனலட்சுமி சக போட்டியாளர்களிடம் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நான்கு வருடங்களாக பிக்பாஸ் வருவதற்கு தான் முயற்சி செய்ததாகவும், அதற்கு இடையே காதல் வந்ததாகவும் பேசி உள்ளார்.

dhanalakshmi about her love before biggboss 6 tamil

ஆனால், அவருக்கு வேறு பெண் கிடைக்கும் எனக்கு பிக்பாஸ் தான் முக்கியம் என்றும் முடிவு செய்து காதலை குழி தோண்டி புதைத்து விட்டேன் என்றும் தனலட்சுமி பேசி உள்ளார். இது தொடர்பான செய்திகள், தற்போது பார்வையாளார்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

BIGGBOSS வர்றதுக்காக தனலட்சுமி எடுத்த சோக முடிவு..? அவங்களே சொன்ன தகவல்.! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi about her love before biggboss 6 tamil

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, Dhanalakshmi will find this news story useful.