தமிழில் ஏகோபித்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
Image Credit : Vijay Television
Also Read | "கமல் அண்ணன்".. பிக் பாஸ் முடிந்த பின் கமல்ஹாசனை நேரில் சந்தித்த விக்ரமன்!!
மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூழலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். இதற்கு காரணம் அனைவருமே ஒவ்வொரு விஷயத்தில் தனித்துவம் வாய்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் செயல்பட்டதால் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசிம் தேர்வாகி இருந்தார். இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்து இருந்தனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருவதையும் நாம் கவனித்திருப்போம். அதே போல, பிக் பாஸ் போட்டியாளர்கள் எங்கே போனாலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு அதிகம் இருந்து வருகிறது.
Image Credit : Vijay Television
இந்த நிலையில் Behindwoods பிரத்யேகமாக நடத்திய "மக்களுடன் அசிம்" என்ற நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அவருக்கு அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் அசத்தலான வரவேற்பை வழங்கி இருந்தனர். இதில் தனலட்சுமியும் விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர்கள் இருவரும் அதிகம் சண்டை போட்டிருந்தாலும் இறுதியில் அண்ணன், தங்கை போல தான் மாறி இருந்தனர். அப்படி ஒரு சூழலில் மக்களுடன் அசிம் என்ற நிகழ்ச்சியிலும் தனலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பேசி இருந்தார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் விமர்சனத்தை சந்தித்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் தன் சார்பிலான விளக்கங்களை தனலட்சுமி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வேறு சில விஷயங்களை பேசி இருந்த தனா, "திரும்பி பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் என்ட்ரி ஆகும்போது எனக்கு யார் கூட எந்த சண்டையும் இருக்க கூடாது, எல்லார்கிட்டயும் நல்லா பேசணும் அப்படிங்குறதுக்காக அவங்ககிட்ட கூட நான் கை கொடுத்து பேசிட்டு தான் நான் வெளியே வந்தேன். எல்லாருமே பார்த்திருப்பீங்க. வெளிய வந்து ஒவ்வொரு இன்டர்வியூல போயி Abuse ன்னு சொல்றாங்க. அப்போ உங்களுக்கு சின்ன புள்ளங்குறது தெரியலையா. சின்ன புள்ளையை இந்த மாதிரி உங்களோட விஷயத்துக்காக யூஸ் பண்றேன்ங்குறது தெரியலையா.
இந்த தடவை நான் BB கொண்டாட்டத்துக்கு போனப்போ அவங்கள நான் திரும்பி கூட பாக்கல. எனக்கு பயமே இல்லை. நான் பாக்கவே இல்ல. ஏன்னா வெளிய வந்ததுக்கு அப்புறம் அவங்க ஆடுனாங்க பாருங்க ஒரு கேம், அதுக்குள்ள போறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை" என தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
Also Read | "Azeem பண்ணது தப்புன்னா, அவரு பண்ணதும் தப்பு தான்".. விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்த தனா