www.garudavega.com
iTechUS

"அப்போவே தெரிஞ்சிடுச்சு".. தன்னுடைய எலிமினேஷன் பற்றி மனம் திறந்த தனலட்சுமி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Dhanalakhmi Talks to Ayeesha about her Elimination from BB

Also Read | "பிக்பாஸ்-க்கு முன்னாடியே மைனா போன்ல சொன்ன விஷயம்".. போட்டு உடைத்த மகேஷ்வரி..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Dhanalakhmi Talks to Ayeesha about her Elimination from BB

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த ஆயிஷா, தன்னிடத்தில் தனலட்சுமி பேசவில்லை என வருத்தப்பட்டு கூறியிருந்தார். அதன்பிறகு இருவரும் தங்களுடைய வெளியுலக வாழ்க்கை குறித்து பேசியிருக்கின்றனர். தனக்கு வெளியே சென்ற முதல் நாள் சற்று கவலையாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதுவே சரியாகிவிட்டதாகவும் ஆயிஷா கூறுகிறார். மேலும், பிக்பாஸ் குறித்து தன்னுடைய நண்பர்கள் சொல்லிய பல விஷயங்கள் தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் ஆயிஷா குறிப்பிட்டு இருந்தார்.

Dhanalakhmi Talks to Ayeesha about her Elimination from BB

அப்போது பேசிய தனலட்சுமி, "அந்த வாரம் வெளியே போவேன்னு நான் யூகிச்சு இருந்தேன். நான் எல்லாமே பேக் பண்ணி வச்சுட்டேன். நீ வெளியே போனப்போ, அதுக்கு அப்புறம் ஜனனி எவிக்ஷன் ஆனப்போ மைனா அக்கா கிட்ட கொஞ்சம் குளோஸ் ஆனேன். ஆனா அப்போவே வீட்டு ஞாபகம் வந்துடுச்சு. எப்படியாவது வெளியே போய்டணும்னு தோணுச்சு. அப்போவே, எனக்கு தெரியும் வெளியே போய்டுவேன்னு" என்கிறார்

Also Read | "ஆத்தாடி இவ்வளவு நாள் அவருகூடவா இருந்தேன்".. BB போட்டியாளர் பற்றி ADK நெகிழ்ச்சி Post..!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakhmi Talks to Ayeesha about her Elimination from BB

People looking for online information on Ayeesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakhmi, Vijay tv will find this news story useful.