www.garudavega.com

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்.. தல அஜித் ROLE-ல 'மெகா ஸ்டார்'.. லக்‌ஷ்மி மேனன் ROLE-ல் இவங்களா..? மாஸ் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளியான திரைப்படம் வேதாளம்.

details vedalam movie telugu remake ajith lakshmi menon roles

அஜித் ரசிகர்களிடையே பெரும் அளவில் ஹிட் அடித்த இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த நிலையில்தான் இந்தப் படம் பற்றிய புதிய அப்டேட்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி தமிழில் வேதாளம் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடித்திருப்பார்.

அந்த வகையில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. இதற்கென கீர்த்தி சுரேஷ், சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்குபெறும் இப்படத்தின் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் ஒரு ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்த திரைப்படத்தை மேஹர் ரமேஷ் (Meher Ramesh) இயக்குவதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்கவிருப்பதாகவும் தெரிகிறது. எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவலுக்காக நாம் காத்திருக்கலாம்.

ALSO READ: தர்ஷன்.. லாஸ்லியா.. நம்ம BiggBoss பிரபலங்களுடன்.. யோகிபாபு இணையும் ரீமேக் படத்தின் தெறி அப்டேட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Details vedalam movie telugu remake ajith lakshmi menon roles

People looking for online information on Ajith, Ajith Kumar, Chiranjeevi, Lakshmi menon, Shruthi Haasan, Siruthai Siva, Vedalam will find this news story useful.