தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' பட டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் குறுகிய நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற தமிழ் பட டிரெய்லர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படம் தீபவாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகிபாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி நகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பட்டாசு, பலகாரம், புதுத்துணி, போனஸ் அப்படின்னு வேற லெவல்ல சிறப்பா தீபாவளி கொண்டாடனும். கவனமா வண்டி ஓட்டுங்க'' என்று குறிப்பிட்டு Meme ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், பிகில் பட டிரெய்லரில் விஜய் பேசும் டயலாக் போல, மைதானத்தில் பைக் ரேஸ் போறவன் விபத்தில் சிக்கினாலும் அடிபடாம உயிர் பிழைக்கிறானே அதுக்கு காரணம் என்ன? அவன் நேரமா ? ஒரே காரணம் ஹெல்மெட்'' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பட்டாசு, பலகாரம், புதுத்துணி, போனஸ் அப்படின்னு வேற லெவல்ல சிறப்பா தீபாவளி கொண்டாடனும்.
கவனமா வண்டி ஓட்டுங்க.#Wearhelmet #Nellai #Tirunelveli#Tirunelvelicitypolice #Bigil pic.twitter.com/WyRc5u5W4t
— Arjun Saravanan (@ArjunSaravanan5) October 14, 2019