தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
Images are subject to © copyright to their respective owners
57 வயதான மயில்சாமி, ஏராளமான திரைப்படங்களில் தோன்றியுள்ள சூழலில் நடிப்பு என்பதை தாண்டி யார் வந்து உதவி கேட்டாலும் தன்னால் ஆன உதவியை செய்யக்கூடிய குணம் படைத்தவர். இதனால் அனைவரிடமே நல்ல பேர் எடுத்துள்ள மயில்சாமியின் இழப்பு, ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமில்லாமல் பல மக்களையும் மீளாத்துறயரில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக தீவிர சிவ பக்தனான மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் பூஜை செய்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்த சமயத்தில் தான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
தொடர்ந்து அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்ட சூழலில் தற்போது பல பிரபலங்கள் மயில்சாமியுடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் உருக்கத்துடன் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். அப்படி இருக்கையில் பிரபல நடிகர் டெல்லி கணேஷ், Behindwoods சேனலுக்காக அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் மயில்சாமி குறித்து ஏராளமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது தன் வாழ்வில் செய்ய நினைத்த விஷயங்களை மயில்சாமி உங்களிடம் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் டெல்லி கணேஷ், "எனக்கு ஒரு கார் வாங்கிக்கணும், பெரிய பங்களா கட்டணும். வாழ்ந்தா அவனை மாதிரி வாழனும்ன்னு எல்லாம் அவர் சொன்னதே கிடையாது. அவர் சொல்றதெல்லாம் நம்ம நாடு நல்லா இருக்கணும், உருப்படியா இருக்கணும். இந்த ஜாதி, மதம், பேதங்கள் எல்லாம் உள்ள கொண்டு வராதீங்க. எல்லாரும் ஒன்னு தான் அப்படிங்குறத அடிச்சு சொல்லுவாரு அவரு. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.
மொத்தத்துல சொல்லணும்னா தனக்காக வாழாத ஒரு நடிகர். ஆனால் குடும்பத்தையும் நல்லா கவனிச்சுக்கிட்டார். பையனும் அப்பா மேல ரொம்ப மரியாதையோடு இருக்கான். இவருக்கும் பையன் மேல ரொம்ப பிரியம் உண்டு. குடும்பத்தை எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டார். இருந்தாலும் மத்தவங்ககிட்டயும் பிரியமா பேசுவாரு. அந்த மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டம். இவ்வளவு நல்ல மனிதனுக்கு ஏன் இவ்வளவு விரைவில் மரணம் வரவேண்டும்?. அது என்னத்துக்குன்னு தான் எனக்கு பதிலே கிடைக்கல. எல்லாரும் சொல்லுவாங்க ஜனனம்ன்னு ஒன்னு இருந்தா மரணம் இருக்கும், எல்லாம் ஓகே.
Images are subject to © copyright to their respective owners
அது அதுக்குன்னு ஒரு வயசு இருக்கு. உடம்பு முடியாம போய் ரொம்ப வயசாகி போனா அது வேற விஷயம். இந்த இளம் வயசுல இன்னும் நிறைய சாதிக்கிறதுக்கு இருக்கே. அரசியலில் நிறைய சாதிக்கணும்னு ஆசைப்பட்டார். 'நான் வரணும் வந்து இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்யா' அப்படின்னு சொல்லுவாரு. அது நடக்காம போச்சுங்குற கவலை தான் எனக்கு. வேற ஒன்னும் இல்ல" என குறிப்பிட்டார்.