www.garudavega.com

ஹிருத்திக் ரோஷன் & தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படம்.. போஸ்டருடன் வெளியான ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிருத்திக் ரோஷன் & தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Deepika Padukone Hrithik Roshan Fighter Movie Release Date

தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின்  கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார்.

தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அணில் கபூர் நடிக்கும் ஃபைட்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Deepika Padukone Hrithik Roshan Fighter Movie Release Date

இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்சன் திரைப்படம் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியாக உள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்த படத்தினை இயக்கி உள்ளார். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் தற்போது ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினையும் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் & பேங் பேங் படங்களை இயக்கியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Deepika Padukone Hrithik Roshan Fighter Movie Release Date

People looking for online information on Anil Kapoor, Deepika Padukone, Fighter, Hridhik Roshan will find this news story useful.