பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வாக்களித்த பின் பகிர்ந்த புகைப்படத்தை கொண்டு சமூக வலைதளங்களில் உலாவிய விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி நேற்று நாடு முழுவதும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கான 4ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் தங்களது ஜனநாயக் உரிமையை நிலைநாட்டும் விதமாக வாக்களித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.
அதேபோல், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும், வாக்களித்த பின் விரலில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தீபிகா படுகோனின் தந்தை டென்மார்க்கில் இருக்கும்போது தீபிகா பிறந்ததால் அவர் இந்தியர் இல்லை என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் யார் எங்கிருந்து வருகிறேன்.. என்ற சந்தேகம் என் மனதில் இல்லை. எனக்காக பேசிக் கொண்டிருப்பவர்களே குழம்பாதீர்கள். உங்களுக்கு அந்த சந்தேகம் வேண்டாம். இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” என ட்வீட் செய்துள்ளார்.
Never has there been any doubt in my mind about who I am or where I’m https://t.co/Iv1nhLQWqD for those of you confused on my behalf...please don’t be!Jai Hind!🙏🏽 #proudtobeanindian #govote pic.twitter.com/8ZYj1g0r9u
— Deepika Padukone (@deepikapadukone) April 29, 2019