கேஜிஎஃப் நாயகன் யாஷ்-ன் மகள் அய்ராவின் கியூட் வீடியோ தான் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | "முதல்ல அப்படி நினைச்சு இருந்தேன்.. அப்பறம் தான்" - சாணிக் காயிதம் பற்றி செல்வராகவன்!
கேஜிஎஃப் 2
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'கேஜிஎஃப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டிகளையும், அதன் பின் கதையின் நாயகன் யாஷ் நடத்தும் அதிரடிகளையும் மையமாக வைத்து கதை நகர்கிறது.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கேஜிஎஃப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.
ராக்கி பாய்
"பாதம் சிறுசுன்னாலும்.. அவன் எடுத்துக்கிட்ட பாதை ரொம்ப பெரிசு" என தியேட்டர்களில் ரசிகர்கள் சில்லறையை தெறிக்கவிட இந்த படத்தின் வசனங்களும் முக்கியமான காரணமாக அமைந்தது. அதிலும் நாயகனை 'ராக்கி பாய்' என்று மக்கள் அழைக்கும் கட்சிகளும் சரி, 'சலாம் ராக்கி பாய்' பாடலும் சரி பக்காவான மாஸ் சீன்கள். இன்ஸ்டா ரீல் துவங்கி பல்வேறு சமூக வலை தளங்களில் மக்கள் இந்த பாடலுக்கு பெர்ஃபார்மென்ஸ் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் யாஷ்-ன் மகள் அய்ரா இந்தப் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்,"சலாம் ராக்கி பாய்" என அய்ரா மழலை மொழியில் பாடும் தருணம் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
இந்த வீடியோவை யாஷ் எடுத்ததாக தெரிகிறது. வீடியோவின் இறுதியில் "யம்மோ" என யாஷ் சொல்ல, அய்ரா அதைக் கேட்டு கியூட்டாக சிரிப்பதற்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை அள்ளி வீசி வருகின்றனர். தனது அப்பாவை அருகில் வைத்துக்கொண்டே, சலாம் ராக்கி பாய் என யாஷ்-ன் மகள் பாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8