சச்சின், தோனி, அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானதை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருக்கிறது.
இதனை சவுரவ் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லவ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் அங்குர் கார்க், ரஞ்சன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற படக்குழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்தி மொழியை மையமாக வைத்து பான் இந்தியன் திரைப்படமாக இது உருவாகிறது
Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen 🏏🎥@LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812
— Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி வந்தார். மேலும் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தார். குறிப்பாக சூதாட்ட சர்ச்சையில் இருந்து இந்திய அணியை மீட்டுருவாக்கம் செய்தவர் இவர் தான்.இவர் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் பல வெற்றிகளை பதிவு செய்தது மேலும் தோனி சேவாக் யுவராஜ் சிங் ஹர்பஜன் சிங் ஜாகிர் கான் முகமது கைப் போன்ற வீரர்களை இந்திய அணிக்கு கொண்டுவந்ததும் சவுரவ் கங்குலி தான்.
We are thrilled to announce that Luv Films will produce Dada Sourav Ganguly's biopic. We are honoured to be entrusted with this responsibility and look forward to a great innings. 🏏🎥@SGanguly99 @luv_ranjan @gargankur
— Luv Films (@LuvFilms) September 9, 2021
இவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. அதில் 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் அடக்கம். இவரது தலைமையின் கீழ்தான் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கங்குலி ஏற்கனவே 'A Century Is Not Enough' எனும் சுயவாழ்க்கை வரலாறு நூலை எழுதியுள்ளார்.